முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவதற்காக நேற்று தேசிய இருதயக் கழகமான ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
101 வயதான மகாதீரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் ஐஜேஎன்னில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவரது அலுவலக செய்தித் தொடர்பாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மகாதீரின் மனைவியான டாக்டர் சித்தி ஹஸ்மா, தனது 100வது வயதில் ஐஜேஎன் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து, மகாதீர் மிகவும் சோகமும் வருத்தமும் அடைந்துள்ளார்.
மனைவியின் மறைவு எதிர்பாராதது எனக் குறிப்பிட்டுள்ள மகாதீர், அதற்கு முந்தைய நாளில் ஹஸ்மா நலமாக இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மகாதீருக்கு ஏற்கனவே இதயநோய் பிரச்சினை இருக்கும் நிலையில், கடந்த 1989 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தவறி விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், வயது காரணமாக அறுவை சிகிச்சைக்கு பதிலாக பிசியோதெராபி சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.








