நாடு முழுவதும், தமது உருவப் படம் அல்லது தமது மடானி அரசாங்கத்தின் எழுத்துகளைத் தாங்கிய விளம்பரங்களை இனி காட்சிக்கு வைக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரையில் பொருத்தப்பட்டுள்ள, பெரிய விளம்பரங்கள் போதுமானதாகும். வருங்காலத்தில் இது போன்ற விளம்பரங்கள் வேண்டாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது பொருத்தப்பட்டுள்ள விளம்பரங்கள், தம்முடைய அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமலேயே பொருத்தப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
விளம்பரங்களுக்காக பணத்தை விரயமாக்க வேண்டாம் என்று ஏற்கெனவே உறுதியாக கூறிவிட்டதாகவும், பிரதமர் மாறியதற்காக பழைய நிதி ஒதுக்கீட்டிலிருந்து அந்த விளம்பரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் துறை விளக்கியதாக அன்வார் தெளிவுப்படுத்தினார்.
இன்று அலோஸ்டாரில் ஹோட்டல் ரஹியாவில் மடானி மலேசியா ஹரி ராயா திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்விற்குத் தலைமையேற்றப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
விளம்பரங்களுக்குச் செலவிடும் தொகையை, வேறு நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்துமாறு தாம் உத்தரவிட்டிருப்பதாக அன்வார் விளக்கினார்.

தற்போதைய செய்திகள்
என் உருவப் படத்தைத் தாங்கிய விளம்பர பலகைகள் இனி வேண்டாம் பிரதமர் அன்வார் வலியுறுத்து
Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


