வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வகையான வர்த்தக நடவடிக்கைகளிலும் நெகிழிப்பைகள் பயன்பாட்டை முற்றாக தடை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டு இருப்பதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் மீதான அமைச்சர் நிக் அஸ்மி நிக் அமாட் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் "நெகிழிப்பைகள் பயன்பாடுயில்லை" என்ற பிரச்சாரத்தை தமது அமைச்சு கட்டம் கட்டமாக தொடங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டில் முற்றாக இந்தத் தடையை கொண்டு வருவதற்கு முன்னதாக நெகிழிப்பைகளினால் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய மாசுப்பாட்டுத் த் தன்மையை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நாடு தழுவிய நிலையில் நடத்தப்படும் என்று அமைச்சர் நிக் அஸ்மி தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


