Sep 28, 2026
Thisaigal NewsYouTube
துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி
தற்போதைய செய்திகள்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

Share:

மறைந்த துன் டாக்டர் சிட்டி ஹஸ்மா முகமது அலியின் மறைவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

துன் டாக்டர் ஹஸ்மா கருணைமிக்க மருத்துவராகவும், பொது சேவையாளராகவும் இருந்து, சாதாரண மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததாக அவர் புகழாரம் சூட்டினார்.

1990களில் இருந்து துன் டாக்டர் ஹஸ்மாவை நண்பராக அறிந்திருந்ததாகவும், அவரை அறிந்திருந்தது தனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளித்ததாகவும் முகமது யூனுஸ் குறிப்பிட்டார்.

உலகின் ஏழ்மையான குடும்பங்களுக்கு நிதிச் சேவைகளை வழங்கும் முயற்சிகளுக்கு அவர் ஆதரவளித்ததாகவும், மைக்ரோகிரேடிட் சம்மிட் கெம்பெயினின் வழிகாட்டுக் குழுவில் அவர் இடம் பெற்றிருந்ததாகவும் யூனுஸ் தெரிவித்தார்.

மேலும், அமானா இக்தியார் மலேசியா அமைப்பின் செயல்முறைகளை வலுப்படுத்தும் நோக்கில், தாம் நிறுவிய கிராம்மின் பேங்ககிற்கு (Grameen Bank) துன் டாக்டர் ஹஸ்மா பலமுறை வருகை தந்ததாகவும் அவர் கூறினார்.

Related News