போலீஸ்காரரை பின்னணியாக கொண்டு செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கெடா மாநில போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு போலீசார் நள்ளிரவு 12.05 மணியளவில் சுங்கைப்பட்டாணி, தாமான் செஜாத்தியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 31 வயது சந்தேகப் பேர்வழியை கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து 5.29கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹஸ்ஸான் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டது மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரம் வெள்ளியாகும் என்று எசிபி சைடி குறிப்பிட்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தடுத்துவைப்பதற்கான நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்


