May 5, 2026
Thisaigal NewsYouTube
அரச  மன்னிப்பு என்பது 'பரிசு' அல்ல; அது ஒரு அரசியலமைப்பு நடைமுறை - பகாங் சுல்தான் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அரச மன்னிப்பு என்பது 'பரிசு' அல்ல; அது ஒரு அரசியலமைப்பு நடைமுறை - பகாங் சுல்தான் விளக்கம்

Share:

குவாந்தான், பிப்ரவரி.02-

அரச மன்னிப்பு என்பது அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான நடைமுறையாகும். அது வெறும் அனுதாபத்தின் அடிப்படையில் வழங்கப்படும் 'பரிசு' அல்ல என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

குவாந்தானில் இன்று நடைபெற்ற பகாங் அரச பிரதிநிதிகள் குழு கூட்டத்தில் பேசிய அவர், தண்டனை குறைப்பு என்பது நீதிமன்றத் தீர்ப்பையோ, குற்றப் பதிவுகளையோ அல்லது சட்டத்தின் ஆட்சியையோ அழித்துவிடாது என்று விளக்கினார்.

"மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, அரசியல் கட்சிக்கோ அல்லது பதவிக்கோ மட்டுமானதல்ல. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களால் தண்டனை குறைப்பு அல்லது மன்னிப்பு வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

மேலும், இத்தகைய முடிவுகள் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படுவதில்லை, மாறாக மாநில மற்றும் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட மன்னிப்பு வாரியத்தின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னரே எடுக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

"மன்னிப்பு வழங்கும் அதிகாரம் என்பது அமைப்பின் பலவீனம் அல்ல; இந்த நாடு சமூக ஊடக உணர்ச்சிகளாலோ அல்லது அரசியல் தளங்களாலோ ஆளப்படுவதில்லை என்பதற்கான நினைவூட்டல் இது. பொதுமக்களின் கோபம் அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை ஒரு போதும் இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது," என்றும் அவர் வலியுறுத்தினார்

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக் தனது எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்திருந்த பின்னணியில், சுல்தானின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நஜிப் தற்போது SRC இன்டர்நேஷனல் நிதி முறைகேடு வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்