புத்ராஜெயா, ஆகஸ்ட்.27-
மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியாவுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் சந்திப்பு நடத்தினார்.
புருணை சுல்தான், காலை 10.30 மணியளவில் புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவை வந்தடைந்தார்.
26 ஆவது மலேசியா-புருணை வருடாந்திர தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக புருணை சுல்தான், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருடன் சந்திப்பு நடத்தினார்.
மலேசியா-புருணை வருடாந்திரத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் என்பது மலேசியா மற்றும் புருணை இடையிலான மிக உயர்ந்த இரு தரப்பு உறவுக்கான கலந்தாலோசிப்பாகும்.
தற்போதைய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் அனைத்துலக விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒரு தளமாக இந்தக் கூட்டம் செயல்பட்டு வருகிறது.








