நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இம்ராஹின் சுல்தான் இஸ்கன்டார் கேட்டுக்கொண்டுள்ளார். அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடியை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாக சுல்தான் குறிப்பிட்டார்.
அன்வார், பதவியேற்றப் பின்னரே அரசாங்கத்தின் நிதிச் சிக்கல்களை உணர்ந்திருக்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவருக்கு இன்னும் நேரம் தேவை என்பதையும் சுல்தான் வலியுறுத்தியுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் அன்வார் மேற்கொண்ட சீன நாட்டின் வருகையின் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல சாதகமான முடிவுகளை வெற்றிகரமாக திரும்ப கொண்டு வந்து இருப்பது குறித்து தாம் மனநிறைவு கொள்வதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


