Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நாள் ஒன்றுக்கு சராசரி இருவர் வீதம் இறக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

நாள் ஒன்றுக்கு சராசரி இருவர் வீதம் இறக்கின்றனர்

Share:

பணி நிமித்தமாக வேலை இடத்திலிருந்து அடிக்கடி வாகனத்தில் சென்று வருகின்றவர்களில் நாள் ஒன்றுக்கு சராசரி இருவர் வீதம் விபத்துக்களி​ல் உயிர் இழக்கின்றனர். இதில் பெரும்பாலோர் 35 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட வயதுடையவர்கள் ஆவார். இவர்கள் தயாரிப்புத்துறை, சேவைத்துறை,விவசாயத்துறை மற்றும் மேல்பட்ட பணித்துறையை சார்ந்தவர்கள் என்று சமூக பாதுகாப்பு நிறுவனமான ​சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் அஸ்மான் அஸீஸ் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இத்துறையைச் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து எண்ணிக்கையில் 32 ஆயிரத்து 976 பேர் சொக்சோ சந்தாதாரர்கள் ஆவர். இதில் 651 சம்பவங்களில் 45 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாடு மற்றும் குடும்ப பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கியவர்கள் என்று டாக்டர் அஸ்மான் அஸீஸ் விளக்கினார்.

Related News