Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டு வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டு வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது

Share:

புக்கிட் காயு ஹித்தாம், ஜூன் 22-

கடந்த ஜுன் 10 ஆம் தேதி டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகை அறிவிக்கப்பட்டு, டீசல் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து புக்கிட் காயு ஹித்தாம் அருகில் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள எண்ணெய் நிலையங்களில் அந்நிய நாட்டு வாகனங்களின் வருகை பெருவாரியாக குறைந்துள்ளது.

தாய்லாந்து – மலேசியா எல்லையையொட்டிய Bukit Kayu Hitam குடிநுழைவு, சுங்கம், நோய்த்தடுப்பு சோதனை சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட போது, உதவித் தொகை அடிப்படையில் கிடைத்த அந்த எரிபொருளை குறைந்த விலையில் வாங்குவதற்கு அண்டை நாட்டிலிருந்து அதிகமான வாகனங்கள், புக்கிட் காயு ஹித்தாம் எண்ணெய் நிலையங்களுக்கு வந்த வண்ணம் இருந்தன.

எனினும் டீசல் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டப் பின்னர் அந்நிய நாட்டு வாகனங்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

எனினும் அந்நிய நாட்டு வாகனங்கள் அதிக அளவில் இல்லாவிட்டாலும் இதனால் வர்த்தகம் பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்று பெரும்பாலான எண்ணெய் நிலையங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்