கோலாலம்பூர், அக்டோபர்.07-
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக இருக்கும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் எதிர்காலத் தொழில்களைக் கட்டமைக்கவும் இந்த பட்ஜெட் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வீட்டு மீள்தன்மையை மேம்படுத்துதல், மென்பொருள்கள், எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் மயமாக்கல், தொடக்க நிறுவனங்கள் மற்றும் எதிர்காலத் தொழில்கள் போன்ற முக்கியத் துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வல்லதாக இருக்கும் என்று அமீர் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
தவிர "இன்றைய அழுத்தங்களிலிருந்து வீட்டு குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்கவும், நாளைய வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கவும்" 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.








