கெந்திங் ஹைலண்ட்ஸ், ஆகஸ்ட்.30-
கெந்திங் ஹைலண்ட்ஸில் உள்ள ஒரு தீம் பார்க்கில் ஒரு பதின்ம வயதுடைய நபரைக் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை 12.06 மணியளவிலும், 12.37 மணியளவிலும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இரண்டு புகார்கள் பெறப்பட்டு இருப்பதை பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் காஹார் உறுதிப்படுத்தினார்.
இந்தப் புகார்கள் முறையே 42 வயதுடைய ஒரு நபரும், 15 வயதுடைய ஒரு பையனும் செய்தவையாகும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் எந்தக் குற்றச் செயலும் இல்லை என்றும், இந்தச் சம்பவம் தவறான புரிதலில் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஸைஹாம் கூறினார்.
இரு தரப்பினரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், ஒரு பதின்ம வயதுடைய நபரை, தீம் பார்க்கின் தரையில் ஒரு கும்பல் இழுத்துச் செல்வதையும், அந்த பதின்ம வயதுடைய நபரைக் காப்பாற்றுவதற்கு ஒரு போலீஸ் அதிகாரி உள்ளே நுழைவதையும் காட்டுகிறது.








