Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது

Share:

நெகிரி செம்பிலான், கிம்மாஸ், சைட் சிராஜூடின் குறிசுடும் பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் அரச மலேசிய ஆகாயப்படை பயிற்சியாளர் ஒருவரும், ஒரு மாணவரும் உயிரிழந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய வெடிமருந்து செயல்பாட்டுத் துறையில் பயிற்சி பெற்ற சிறப்பு குழுவைக் கொண்ட விசாரணை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை செயல்படுத்தும் SOP யை மீறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனமாக கருத்தில் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசன் தெரிவித்துள்ளார்.

Related News