Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்
தற்போதைய செய்திகள்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

Share:

கூச்சிங், மார்ச்.22-

மலேசியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், Hormuz நீரிணைப் பகுதியில் நீடித்து வரும் பதற்ற நிலை தொடர்ந்தால், மாற்று எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோனாஸ் பல்வேறு திட்டங்களைப் பரிசீலித்து வருவதுடன், ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள் எவ்வாறு இந்த எண்ணெய் சவால்களைச் சமாளிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்து வருவதாக மலேசிய துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இப்பிரச்சினையை எவ்வாறு கையாளுகின்றன என்பதையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hormuz நீரிணை பகுதியில் நிலவும் மோதல் காரணமாக, எரிபொருள் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், மாற்று வழிகளை உறுதிச் செய்ய பெட்ரோனாஸ் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்... | Thisaigal News