கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள செம்பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயத்திற்கு ஆளாகினார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.23 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, செடிலி ஜாலான் சுஙாய் அராவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் நிகழ்ந்தது.
20 வயது மதிக்கத்தக்க மூவர் செய்த வாகனம் சின்னாபின்னமாகியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். கடும் காயங்களுக்கு ஆளான மேலும் இருவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்ததாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


