Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்
தற்போதைய செய்திகள்

கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

Share:

பினாங்கிலுள்ள கல்லறை ஒன்றில், பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜார்ஜ் டவுன் உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளனர்.

58 வயதான எம். ஜெகதீசன் மற்றும் 37 வயதான ஹலீலா அபூ பக்கர் ஆகியோர், சீன கல்லறையில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை மஜிஸ்திரேட் நீதிமன்றம், அவர்களுக்கு, தலா 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்நிலையில், அவர்களின் வழக்கறிஞர் நாரன் சிங், வழங்கப்பட்ட சிறைத்தண்டனை “அதிகமாகவும் கடுமையாகவும் உள்ளது” என்று கூறி அப்பீல் செய்துள்ளார்.

தண்டனை அளவு பொருத்தமானதா? என்பதை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றத்திடம் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News