Jul 31, 2026
Thisaigal NewsYouTube
இன்னும் 7. 8 பேர் ஆதரவைத் தெரிவிப்பர் !
தற்போதைய செய்திகள்

இன்னும் 7. 8 பேர் ஆதரவைத் தெரிவிப்பர் !

Share:

தேசியக் கூட்டணியைச் சேர்ந்த இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வார் இபுராகிம்முக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷெட் அபு ஹுசின் ஹஃபிஸ் ஷெட் அப்துல் ஃபாசால் தெரிவித்தார்.

இன்னும் 7 அல்லது 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு விரைவில் பிரதமருக்கான தங்கள் ஆதரவை தெரிவிக்கக் கூடும் என்றார் அவர்.

முன்னதாக, பிரதமருக்கான தமது ஆதரவை பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஷெட் அபு ஹுசின் ஐந்தாவது நபராக அறிவித்திருந்தார். இவ்விவகாரம் குறித்து தேசியக் கூட்டணி அல்லது எர்சத்துவின் உயர்மட்டத் தலைவர்கள் யாரும் தம்மை சந்திக்க வில்லை என ஷெட் அபு ஹுசின் குறிப்பிட்டிருந்தார்.

கட்சி சார்ந்த வாட்ஸ்-அப் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஷெட் அபு ஹுசின், பிரதமருக்கு ஆதரவளிப்பது பெர்சத்து கட்சியின் சட்டவிதிகளின்படி தவறில்லை எனத் தெரிவித்தார்.

Related News