Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அன்வார் பதவி விலகல் பேரணி: ஆதாரமற்ற அரசியல் நோக்கம் - கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணி கண்டனம்
தற்போதைய செய்திகள்

அன்வார் பதவி விலகல் பேரணி: ஆதாரமற்ற அரசியல் நோக்கம் - கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணி கண்டனம்

Share:

ஈப்போ, ஜூலை.19-

துருன் அன்வார் எனப்படும் பேரணியை நடத்தக் கோரும் எதிர்க்கட்சிகளின் செயல் முற்றிலும் ஆதாரமற்றதும், அரசியல் உள்நோக்கம் கொண்டது என கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தப் பேரணி தற்போதைய உண்மை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும், மக்களின் மத்தியில் கலவரத்தைத் தூண்டி, ஒரு சிலரின் ஊழல் நலன்களுக்கு மட்டுமே பயன்படும் என்றும் அதன் தகவல் தொடர்பு துணைத் தலைவர் ஆர். ஷர்வின் தெரிவித்தார்.

மடானி அரசு அமைக்கப்பட்டதில் இருந்து பணவீக்கம் குறைப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, ரஹ்மா ரொக்க உதவிகள் போன்ற பல்வேறு சாதனைகளை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இது எதிர்க்கட்சிகளின் தோல்வியை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டும் என்றும் ஷர்வின் மேலும் தெரிவித்தார்.

Related News