Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடி பேர்வழிகளுக்கு துணை நிற்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடி பேர்வழிகளுக்கு துணை நிற்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை

Share:

அதிக வாடகை கிடைக்கிறது என்பதற்காக தங்களின் ஆம்பர அடுக்குமாடி வீடுகளை ஓன்லைன் மோசடிக்கும்பல்களுக்கு வாடகை விட்டு, அந்த கும்பல்களின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் மட்டுமல்ல, சொத்துடைமை விற்பனையில் ஈடுபட்டுள்ள இடைத் தரகர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் எச்சரித்துள்ளார்.

கோலாலம்பூர் மாநகரில் கடந்த இரண்டு மாத காலத்தில் தாங்கள் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஓன்லைன் மோசடிக்கும்பல்கள், தங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆடம்பர கொண்டோமினியம் வீடுகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளது என்று மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அம்பலப்படுத்தியிருந்தார்.
கோலாலம்பூர் போலீசாரின் இந்த தகவலைத் தொடர்ந்து ஆடம்பர அடுடக்குமாடி வீட்டு உரிமையாளர்களுக்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தது.

Related News