Oct 17, 2026
Thisaigal NewsYouTube

அந்த நபருக்கு 17 குற்றச்செயல்கள் பதிவு உள்ளன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த நபருக்கு 17 குற்றச்செயல்கள் பதிவு உள்ளன

காஜாங், நவம்பர் 05-

காஜாங், ஜாலான் பத்து 9, அருகில் உள்ள டோல் சாவடியில் அதன் பணியாளரை கடும் வார்த்தைகளால் திட்டியதுடன், டோல் சாவடியின் டச் அண்ட்கோ பகுதியில் கேஷியர் கூண்டை எட்டி உதைத்து ஆவேசமாக நடந்து கொண்ட நபர், ஏற்கனவே 17 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபர், நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.

காரைவிட்டு, இறங்கி, டோல் சாவடியில் அந்த நபர் ஆவேசமாக நடந்து கொண்ட செயல், டோல் சாவடியில் பொருத்தப்பட்டுயிருந்த ரகசிய கேமராவின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

31 வயதுடைய அந்த நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏ.சி.பி. நஸ்ரோன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →