புத்ராஜெயா, ஆகஸ்ட்.22-
தனது மைத்துனியுடன் தகாத உறவு கொண்ட குற்றத்திற்காக ஒரு முன்னாள் போலீஸ்காரருக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறை மற்றும் 3 பிரம்படித் தண்டனையை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.
32 வயதுடைய அந்த முன்னாள் போலீஸ்காரர் செய்து கொண்ட மேல்முறையீட்டை டத்தோ அஸ்மான் அப்துல்லா தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் தள்ளுபடி செய்தனர். பாதுகாப்புத் தேடி தனது வீட்டிற்கு வந்த மைத்துனியுடன் தகாத உறவு கொண்டது, அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை ஒரு காவல்காரரான சம்பந்தப்பட்ட நபர் பாழாக்கியுள்ளார் என்று நீதிபதி வர்ணித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள ஒரு வீட்டில் 19 வயதுடைய தனது மைத்துனியுடன் தகாத உறவு கொண்டதாக அந்த போலீஸ்காரருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.








