இன்று நண்பகலில் இருந்து பெய்த கன மழையால், ஜோகூர் பாருவில் 25 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 3.40 மணி வரையில் 25 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை ஜோகூர் பாரு மாநகர் மன்றம் தமது முகநூல் பதிவின் வாயிலாகத் தெரிவித்தது. அதே சமயம், சில பகுதிகளில் வெள்ளம் வற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
MBJBயின் படை தற்போது நகரைச் சுற்றியுள்ள இடங்களில் நீர்வழிகள் சரியாகச் செயல்படுவதைக் கண்காணித்து உறுதிசெய்யவும், அபாயகரமான இடங்களில் கட்டுப்படுத்தவும் தயாராக உள்ளது.
விஸ்மா பெர்செகுத்துவான் செல்லும் ஜாலான் கெர்த்தாக் மேரா சந்திப்பிலும், நகர மையத்திற்கும் நொங் சிக் ஹைட்ஸ்க்கும் செல்லும் ஜாலான் கோலாம் ஆயிர் இல் ஒரு பகுதியும் உட்பட சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வழிகளில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதைத் தடுக்க அவை மூடப்பட்டதாக அம்மன்றம் தெரிவித்தது.








