Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் நலனின் மிகுந்த கவனம் செலத்தக்கூடியவர்
தற்போதைய செய்திகள்

மக்களின் நலனின் மிகுந்த கவனம் செலத்தக்கூடியவர்

Share:

நாட்டின் அடுத்த மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அதீத கவனம் செலத்தக்கூடிய ஓர் ஆட்சியாளர் ஆவார் என்று ஜோகூர் மக்கள் வர்ணித்துள்ளனர்.

மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் முன்னெடுப்பதிலும் , அவர்களின் நலன்களை கவனிப்பதில் பிரத்தியேக கவனத்தை செலுத்தி வரும் ஓர் ஆட்சியாளராக சுல்தான் இப்ராஹிம் விளங்குகிறார் என்று அவர்கள் புகழாரம் சூட்டினர்.

ஜோகூர்வாசிகள் அனைவரும் ஜோகூர் இனம் என்ற ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்திய பெருமை சுல்தான் இப்ராஹிமையே சாரும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சிறப்புக்கூட்டத்தில் 17 ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related News