Dec 19, 2025
Thisaigal NewsYouTube
ஹலால் வளாகங்களில் கிறிஸ்துமஸ் அலங்கரிப்புக்குத் தடை விதிப்பதா? ஜசெக இளைஞர் பிரிவு கண்டனம்
தற்போதைய செய்திகள்

ஹலால் வளாகங்களில் கிறிஸ்துமஸ் அலங்கரிப்புக்குத் தடை விதிப்பதா? ஜசெக இளைஞர் பிரிவு கண்டனம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.19-

மலாக்காவில் ஹலால் சான்றிதழ் பெற்ற வளாகங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்கு மாநில இஸ்லாமிய சமய இலாகாவான JAIM (ஜைய்ம்) விதித்துள்ள தடைக்கு ஜசெக. இளைஞர் பிரிவான DAPSY கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹலால் சான்றிதழின் முக்கியத்துவத்தை DAPSY மதிக்கிறது. ஆனால், இந்தத் தடையாது, JAIM- மின் அதிகார வரம்பை மீறி மற்ற சமூகங்களின் கலாச்சார வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.

Jaim விதிக்கக்கூடிய இத்தகையக் கட்டுப்பாடு, மலாக்காவின் சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும் மலாக்கா DAPSY நினைவுறுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் பல தசாப்தங்களாக மலேசியாவில் ஒரு கலாச்சார மற்றும் சமூகக் கொண்டாட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தத் தடையானது, மலாக்காவின் உள்ளடக்கிய மற்றும் பல்லின கலாச்சார மதிப்பீடுகளுக்கு முரணானது என்று DAPSY குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2023 ஆண்டு மலேசிய இஸ்லாமிய சமய இலாகாவான JAKIM, ஹலால் கேக்குகளில் வாழ்த்துச் செய்திகள் எழுதலாம் என அனுமதி அளித்த நிலையில், தற்போது மலாக்காவில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை வணிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் DAPSY தெரிவித்தது.

Related News