ஈப்போ, அக்டோபர்.02-
பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிருந்து வேப் எனப்படும் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் வழங்கப்படாது என்று மாநில மனிதவள, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி பேரா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் வாயிலாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தினால் மின் சிகரெட் விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் வரை ஓர் ஆயத்த நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் பேரா மாநிலத்தில் மின் சிகரெட் விற்பனைக்கான லைசென்ஸை ஊராட்சி மன்றங்கள் வெளியிடாது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.
பெர்லிஸ், கெடா, ஜோகூர், பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து ஏழாவது மாநிலமாக பேரா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு லைசென்ஸ் வெளியிடாது என்று சிவநேசன் விளக்கினார்.








