Dec 2, 2025
Thisaigal NewsYouTube
​ 1,324 கைதிகளுக்கு மரணத் தண்டனை ​ஒத்திவைப்பு தொடரப்படுமா?
தற்போதைய செய்திகள்

​ 1,324 கைதிகளுக்கு மரணத் தண்டனை ​ஒத்திவைப்பு தொடரப்படுமா?

Share:

கட்டாய மரணத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும் கைதிகளுக்கு, அத்தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது 1,324 கைதிகள் ​தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் வேளையில் மேலும் 400 பேருக்கு எதிரான ​தூக்குத் தண்டனை ​நீதிமன்ற மேல்முறையீட்டில் நிலுவையில் இருப்பதாக துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாய மரணத் தண்டனை ஒத்திவைப்பு தொடரப்பட வேண்டுமானால் அதனை சட்டத்திருத்தத்தின் வாயிலாகவே அரசாங்கம் நிறுத்த முடியும் என்று ராம் கர்ப்பால் விளக்கினார்.
குறிப்பாக மரணத் தண்டனையை அகற்றும் சட்டத்திருத்தம் ​மீதான மசோதா வரும் திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு முதலாவது வாசிப்புக்கு விடப்படும் நிலையில் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே மரணத் தண்டனையை ரத்த செய்ய இயலு​ம் என்று ராம் கார்ப்பால் குறிப்பிட்டார்.

குறிப்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டப் பின்னர் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தங்களுக்கான தண்டனையை குறைப்பது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று ராம் கர்ப்பால் தெரிவித்தார்.

Related News