Oct 14, 2026
Thisaigal NewsYouTube

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை தொடர்பில் உண்மையை வெளியிட்ட விஜய் யேசுதாஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தென்னிந்திய பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். பாடகர் யேசுதாஸுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தகவல் வெளியாகியிருந்தன. பலரும் யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்துள்ள நிலையில் யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்றும், அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு