Dec 9, 2025
Thisaigal NewsYouTube
மோசடியால் பாதிக்கப்பட்ட 32 மலேசியர்கள் நாடு திரும்புகின்றனர்
தற்போதைய செய்திகள்

மோசடியால் பாதிக்கப்பட்ட 32 மலேசியர்கள் நாடு திரும்புகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.09-

மோசடிச் செயல்களால் பாதிக்கப்பட்டு மியன்மார் – தாய்லாந்து எல்லைப் பகுதியில், சிக்கித் தவித்த 32 மலேசியர்களைத் தாய்லாந்து இராணுவம் பத்திரமாக மீட்டு, அடைக்கலம் கொடுத்துள்ளது.

அவர்கள் அனைவரும் நாளை மலேசியா திரும்புவார்கள் என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தூதரகம் சார்பில் விடுக்கப்பட்ட மனிதநேய உதவிகளுக்கான கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தாய்லாந்தின் எல்லை நகரமான Mae Sot-க்கு அழைத்துச் செல்லப்பட்டு, சோதனைகளுக்குப் பிறகு மலேசியா திரும்புவார்கள் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மியன்மார் நாட்டின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள, மேலும் 21 மலேசியர்களும், நாளை மலேசியா திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News