Mar 23, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிய முயற்சித்ததாக இந்தோனேசிய பிரஜை மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிய முயற்சித்ததாக இந்தோனேசிய பிரஜை மீது குற்றச்சாட்டு

Share:

கடந்த மே மாதத்தில், தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிய முயற்சித்ததாக இந்தோனேசிய வியாபாரி ஒருவர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

39 வயது அந்த இந்தோனேசிய வியாபாரி நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் முதல் குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படியும், இரண்டாம் குற்றச்சாட்டுக்கு கூடிய பட்சம் 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படியும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த மே 27 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் ஜொகூர், பத்து பஹாட்டில் உள்ள ஒரு வீட்டில் தனது 13 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News