ஈப்போ, டிசம்பர்.08-
இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் இரு ஆடவர்கள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று தைப்பிங் அருகில் தெக்கா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இதில் 46 வயது விமானப் பயிற்றுநரும், 40 வயது பயிற்சியாளரும் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பில் காலை 10.30 மணிக்கு போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நாசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








