Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளையில் மோதி அண்ணன் உயிரிழந்தார், தம்பி கடும் காயம்
தற்போதைய செய்திகள்

சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளையில் மோதி அண்ணன் உயிரிழந்தார், தம்பி கடும் காயம்

Share:

மலாக்கா, ஆகஸ்ட்.12-

அண்ணனும் தம்பியும் இரு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்த போது சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளையில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் அண்ணன் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில், தம்பி கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மலாக்கா, லெபோ அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் சாலையில் கண்டாங் அருகில் நிகழ்ந்தது.

இதில் 33 வயது முகமட் ஃபௌஸி போர்ஹான் உயிரிழந்த வேளையில் அவரின் 30 வயது தம்பி முகமட் நாயிம் கடும் காயங்களுக்கு ஆளாகி மிக கவலைக்கிடமான நிலையில் மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த இரு சகோதரர்களும் தம்பினிலிருந்து ஜோகூர், மூவாரை நோக்கி இரு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

Related News