Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

Share:

பினாங்கு பாலம் மற்றும் சுல்தான் அப்துல் ஹலீம் முவாட்சாம் ஷா பாலத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைவதைத் தடுக்க மலேசிய கடல்சார் அமலாக்க முகமையான எம்எம்இஏ மற்றும் பிற அமலாக்க அமைப்புகள் இணைந்து ஆப் காஸ் பெர்செபாது என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

1959ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சட்டத்தின் கீழ் இந்த இரண்டு பாலங்களும் பாதுகாக்கப்பட்ட தேசிய முக்கிய கட்டமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோத நுழைவுகளைத் தடுக்கவும், சட்ட அமல்பாட்டை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்எம்இஏ தெரிவித்துள்ளது.

சோதனையின் போது, முன்னர் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த பகுதிகளில் தற்போது யாரும் அத்துமீறி நுழையவில்லை என்பது கண்டறியப்பட்டது.

மேலும், இரண்டு பாலங்களின் கீழ், இருபுறமும் 250 மீட்டர் தூரம் வரை எந்தவித நுழைவும் தடை செய்யப்பட்டுள்ளதாக எம்எம்இஏ, மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இந்தத் தடையை மீறுவோருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 1,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், குற்றவியல் சட்டம் பிரிவு 447-ன் கீழும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related News