May 26, 2026
Thisaigal NewsYouTube
துணை தலைமை ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

துணை தலைமை ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, டிச.12-

மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பள்ளி துணை தலைமையாசிரியர் ஒருவர் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

37 வயது தே சாவ் தெய்க் என்ற அந்த துணை தலைமையாசிரியர் நீதிபதி ஜீன் ஷர்மிலா ஜேசுதாசன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 6.40 மணியளவில் ஈப்போ, செமோர், பண்டார் பாரு கிளோபாங்கில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் வகுப்பறையில் 12 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக புறப்பபாட ஆசிரியருமான அந்த துணை தலைமையாசிரியர் மீது இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த துணை தலைமையாசிரியர் குற்றச்சசாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு