சுங்கை பட்டாணி, ஜனவரி.14-
இன்று, சுங்கை பட்டாணி, தாமான் ரியா வீடமைப்புப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான பொருட்களைச் சேதப்படுத்தி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை அந்த நபர் கையில் ஆயுதம் ஏந்தியவாறு, ஆவேசத்துடன் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சில வீடுகளின் முன்பகுதியைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கை பட்டாணி போலீசார், அந்த நபர் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குள் அவரை மடக்கிப் பிடித்தனர் என்று கோல மூடா மாட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
விசாரணையில், அந்த நபர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. சிறுநீர் பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று ஏசிபி ஹன்யான் தெரிவித்தார்.








