Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சுட்டுக்கொல்லப்பட்ட இரு கொள்ளையர்கள் வியட்நாம் பிரஜைகள் ஆவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுட்டுக்கொல்லப்பட்ட இரு கொள்ளையர்கள் வியட்நாம் பிரஜைகள் ஆவர்

நிபோங் திபால்,செப்டம்பர் 27-

பினாங்கு, நிபோங் திபால், புக்கிட் பஞ்சோர் , தொழிற்பேட்டை பகுதியில் ஒரு தொழிற்சாலையில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரு கொள்ளையர்கள், வியட்நாம் பிரஜைகள் ஆவர்.

38 மற்றும் 39 வயதுடைய அந்த இரண்டு வியட்நாம் பிரஜைகளும், 11 கொள்ளைச் நம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது

தொழிற்சாலை, கிடங்கு மற்றும் இரும்புப்பெட்டகம் ஆகியற்றை இலக்காக கொண்டு இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

அந்த இரு நபர்களும் அதிகாலை 3.20 மணியளவில் அந்த தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொள்ளையிட்டப் பின்னர் வெளியேறிக்கொண்டு இருந்த போது அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயற்சித்தனர். ஆனால், அவர்கள் பாராங்கை கொண்டு போலீசாரை தாக்க முயற்சித்த போது இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பினாங்கில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹம்சா அகமது இதனை தெரிவித்தார்.

இருவரையும் சுட்டு வீழ்த்தப்பட்டது மூலம் பினாங்கு மற்றும் கெடாவில் நிகழ்ந்த 11 கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்