"நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் மற்றும் நான்கு மாவட்ட உண்டாங் தலைவர்களுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு, மாநில சட்டவிதிகளின்படி தீர்க்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் விவேகமான முடிவிற்கு தாம் மதிப்பளிப்பதாகக் கூறிய டத்தோஸ்ரீ அன்வார், தற்போது நிலைமை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, உண்டாங் தலைவர்களின் புறக்கணிப்பு காரணமாக மாநில சட்டமன்றக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சிக்கல்கள் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்காது என்றும், அடுத்த கூட்டத் தொடருக்குள் சுமூகத் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மாநில சபாநாயகர் டத்தோ எம்.கே. இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்."








