ஷா ஆலம், பெர்சியாரன் மொக்தார் தஹாரி சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்திதொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் ஒருவர், எம்.பி.வி வாகனத்தில் மோதி உயிரிழந்தார். மாலை 5.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் திரைப்படத்துறை ஆய்வியல் மாணவரான 21 வயதுடைய அந்த இளைஞர் ,சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். புன்சக் ஆலம் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்த டொயோட்டா எஸ்டிமா ரகத்திலான அந்த எம்.பி.வி வாகனம், அருகில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு திரும்பிய போது, சம்பந்தப்பட்ட மாணவர் செலுத்திய ஹோண்டா ஆர்எஸ்-எக்ஸ் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பின்புறத்திலிருந்து மோதியதாக கூறப்படுகிறது என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்


