Sep 15, 2026
Thisaigal NewsYouTube
பத்து பகாட்டில் வலைக்குள் கட்டப்பட்ட சடலம் மீட்பு: 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பத்து பகாட்டில் வலைக்குள் கட்டப்பட்ட சடலம் மீட்பு: 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் மாநிலம், பத்து பகாட், சுங்கை தஞ்சோங் செம்புரோங் பகுதியில் வலையால் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட வழக்கில், நான்கு சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடையதாக மேலும் இரு உள்ளூர் ஆடவர்கள், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி குளுவாங்கில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

மேலும், சந்தேக நபர்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி யோங் பேங் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு ஏற்கெனவே குற்றப் பின்னணி இருப்பது தெரிய வந்ததுடன், இருவரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹாமான் அர்ஷாட் தெரிவித்துள்ளார்.

Related News