ஷா ஆலாம், நவம்பர்.14-
கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் பாப்பான் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 14 பேர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
வீடுகள் உடைக்கப்படுவதை எதிர்த்து போலீஸ் பணியில் குறுக்கிட்டதற்காகக் கைது செய்யப்பட்ட அரசு சாரா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் அந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என 14 பேர், இரண்டு நாள் தடுப்புக் காவலுக்குப் பிறகு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவர் என்று அவர் விளக்கினார். அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டம் 186 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டனர் என்று அவர் மேலும் விளக்கினார்.








