ஷா ஆலாம், செப்டம்பர்.23-
அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கும் உதவித் தொகைக்கான பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்கு மலேசியர்கள் யார், யார் தகுதி பெற்றுள்ளனர் என்பதை வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் ஓன்லைன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
இலக்குக்கு உரிய மக்களுக்கு பெட்ரோல் ரோன் 95 எரிபொருள் சென்றடைவதை உறுதிச் செய்வதற்கு அவ்வகை பெட்ரோலை வாங்கும் ஒவ்வொருவரும் மானிய விலையில் பெட்ரோல் கிடைப்பதற்குத் தங்கள் மைகாட் அட்டையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
பூடி மடானி ரோ95 சலுகைத் திட்டத்திற்குத் தாங்கள் தகுதி பெற்றுள்ளார்களா என்பதை மலேசியர்கள் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் www.budimadani.gov.my என்ற அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் அமீர் ஹம்ஸா அறிவுறுத்தியுள்ளார்.








