Jul 30, 2026
Thisaigal NewsYouTube
PRICE CATCHER செயலியை பதிவிறக்கம் செய்வீர் - FAHMI
தற்போதைய செய்திகள்

PRICE CATCHER செயலியை பதிவிறக்கம் செய்வீர் - FAHMI

Share:

கோலாலம்பூர்,ஜூலை 21-

திடீர் பொருள் விலை உயர்வு பிரச்சனையை சமாளிக்க, உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவின அமைச்சின் Price Catcher செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil வலியுறுத்தியுள்ளார்.

அந்தச் செயலியின் மூலம் பொருள்களின் விலையை எளிதில் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

ஒருவேளை குறிப்பிட்ட பொருளின் விலை நிர்ணையிக்கப்பட்டதை காட்டிலும் அதிகமாக இருப்பதை மக்கள் கண்டறிந்தால், அது பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட தகவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் பொருளின் விலை, இப்போது அதை வாங்குவதில் எதிர்நோக்கும் சிக்கல் குறித்தும் மக்கள் தகவல் துறையினரிடம் தெரிவிக்கலாம்.

அதன் வாயிலாக பொருள் விலை உயர்வு பிரச்சனையை கையாளுவதற்கான வழிகளை KPDN-உடன் இணைந்து தமதமைச்சு ஆராயும் என FAHMI குறிப்பிட்டார்.

PRICE CATCHER செயலியின் கீழ் மளிகைக்கடை மற்றும் பல்வேறு சந்தைகளில் விற்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நானூற்று 80 பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு