Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சிறுமி சித்ரவதை, தம்பதியருக்குத் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறுமி சித்ரவதை, தம்பதியருக்குத் தடுப்புக் காவல்

மலாக்கா, ஜூன்.24-

தனது மகளைச் சித்ரவதை செய்து, மரணம் விளைவித்ததாக நம்பப்படும் சொந்த தாயாரும், வளர்ப்புத் தந்தையும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு ஏதுவாக அந்த தம்பதியர், இன்று காலையில் மலாக்கா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

30 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக மலாக்கா, குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவின் தலைவர் ஏசிபி லியோ கியான் ஹியோங் தெரிவித்தார்.

ஒன்பது வயது சிறுமி, தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளானதாக மலாக்கா மருத்துவமனையின் டாக்டர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →