Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படலாம்

டிச. 20-

கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia. கிக்ஷக்கு ஜோகூர், பகாங், திராங்கானு, கிளாந்தான், சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரையோரப் பகுதிகள் இதனால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MetMalaysia கணித்துள்ளது.

அதேபோல், திராங்கானு, கிளாந்தான், சரவாக், கிழக்கு சபா ஆகிய பகுதிகளில் கடலில் கடும் காற்று வீசும், கன மழை பெய்யும், மின்னல் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடுமையான காலநிலை காரணமாக சிறிய படகுகள் பாதிக்கப்படலாம்.

சரவாக் கடற்பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், 4.5 மீட்டர் உயரமான அலைகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசமான காலநிலை காரணமாக கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.

மலாக்கா நீரிணை, தியோமான் தீவு, Condore, Bunguran, Layang-Layang, Labuan, Palawan, Sulu, Sulawesi ஆகிய பகுதிகளில் கடலில் கடும் காற்று வீசும், கன மழை பெய்யும், மின்னல் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடுமையான காலநிலை காரணமாக சிறிய படகுகள் பாதிக்கப்படலாம் என MetMalaysia எச்சரித்துள்ளத்து.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →