May 24, 2026
Thisaigal NewsYouTube
அலோர் கஜா-வில் வெள்ளம்; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 237 பேராக குறைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

அலோர் கஜா-வில் வெள்ளம்; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 237 பேராக குறைந்துள்ளது

Share:

மலாக்கா,ஆகஸ்ட் 13-

மலாக்கா, அலோர் கஜா-வில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்றிரவு 7.30 அளவில் 407 பேராக இருந்த நிலையில், இன்று காலை மணி 7 அளவில் 237 பேராக குறைந்துள்ளது.

எஞ்சியவர்கள் அனைவரும் அம்மாவட்டத்திலுள்ள 6 துயர்துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக, மலாக்கா இயற்கை பேரிடர் மேலாண்மை செயற்குழு செயலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சுமார் 21 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துயர்துடைப்பு மையங்கள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

இன்று காலையில் வானிலை சீராக உள்ள வேளை, அம்மாவட்டத்தில் எந்தவொரு முதன்மை சாலைகளும் போக்குவரத்துக்காக மூடப்படவில்லை எனஅச்செயலகம் கூறியுள்ளது.

Related News