Jun 25, 2026
Thisaigal NewsYouTube
கெதெரே கொலை வழக்கில் அனுமதியின்றி போலீஸ் சின்னம் பயன்படுத்தி போலித் தகவல்கள் - போலீஸ் தகவல்
தற்போதைய செய்திகள்

கெதெரே கொலை வழக்கில் அனுமதியின்றி போலீஸ் சின்னம் பயன்படுத்தி போலித் தகவல்கள் - போலீஸ் தகவல்

Share:

கெதெரே, கம்போங் சிமா, பகுதியில், 19 வயது கல்லூரி மாணவி நூர்ஃபிஸ்யா சுல்கிஃப்லி கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதற்காக, அனுமதியின்றி போலீஸ் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசுப் மமாத் தெரிவித்துள்ளார்.

இச்செயலானது, அத்தகவல்கள் போலீசாரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவை என்ற தவறான நம்பிக்கையை பொதுமக்களிடம் உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பரபரப்பான தலைப்புகளுடன் தனது புகைப்படமும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக யூசுப் மமாத் தெரிவித்துள்ளார்.

இது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கமுடைய செயல் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும் யூசுப் மமாத் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.