கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தமது 14 மற்றும் 12 வயது மகன்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது மாது, இன்று கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த மாதுவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை, நீதிபதி ஷஃபீரா முகமட் சைட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட வேளையில், தாம் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மே 2 ஆம் தேதி ஷா ஆலாம், புன்சாக் ஆலாமில் கைது செய்யப்பட்ட அந்த மாது, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது பிரமம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மே 10 ஆம் தேதி வரை கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த மாது பின்னர் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த மாது தமது செயலை பதிவு செய்து வைத்திருந்த கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


