Jul 1, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

Share:

அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் கஞ்சா வளர்க்க வேண்டும் என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சரான முகமட் சாபு கூறுவது போல், போலியாக மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருவது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போலியான புகைப்படத்தை பரப்பியவர்களுக்கு எதிராக முகமட் சாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், அப்புகைப்படம் முற்றிலும் பொய்யானதும் அவதூறானது, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியிடம் அமைச்சர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related News