பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களின் மனங்களில் இடம் பெறுவதில் அவருக்கான ஆதரவு 50 விழுக்காடு சரிவு கண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை என்று புத்ராஜெயா விளக்கம் அளித்துள்ளது.
மெர்டேக்கா ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கருத்து தெரிவித்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகும். கிட்டத்தட்டட 1,200 பேர் மட்டுமே அந்த ஆய்வில் பங்கு கொண்டுள்ளனர். இது மிக சிறிய எண்ணிக்கையாகும்.
இது நாட்டில் உள்ள 3 கோடியோ 20 லட்சம் மக்களின் உள்ளக்கிடங்கை, இந்த சிறிய எண்ணிக்கையை கொண்ட ஆய்வு பிரதிபலிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.








