Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

நவ. 28-

நாட்டின் முன்னணி தொழிலதிபரும், கோடீஸ்வரருமான டான்ஸ்ரீ T. ஆனந்தகிருஷ்ணனின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

அன்னாரை பிரிந்து துயருற்று இருக்கும் அவரின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தமது குறிப்பிட்டுள்ளார்.

Usaha Tegas Sdn Bhd முதலீட்டு நிறுவனத்தின் தலைவரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், நிறுவனத்துறையில் மலேசியாவிற்கும், வர்த்தக உலகிற்கும் ஆற்றிய பங்களிப்பு நிச்சயம் நினைவுகூரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரோ, மெக்ஸிஸ் உள்ளிட்டு பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமையாளரான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், இன்று தமது 89 ஆவது வயதில் காலமானார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →