ஷா ஆலாம், நவம்பர்.24-
கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் ஜாலான் பாப்பானில் தங்கள் வீடுகளை பலவந்தமாக உடைத்தற்காக Melati Consolidated Sdn. Bhd. நிறுவனம், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, சிலாங்கூர் அரசு நெருக்குதல் அளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையில் ஷா ஆலாமில் சிலாங்கூர் சட்டமன்ற கட்டடத்திற்கு வெளியே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மகஜர் ஒப்படைக்கும் நிகழ்வில் அவர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.
மலேசிய சோஷலிச கட்சியான PSM துணைத் தலைவர் எஸ். அருட்செல்வத்துடன் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்த கம்போங் ஜாலான் பாப்பான் மக்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு சிலாங்கூர் அரசு, தங்களுக்கு வாக்குறுதி அளித்ததைத் போல 99 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் தரை வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.








